ஐரா பட டீஸர் பார்க்க:நயன்தாரா63

லேடீ சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 63வது படமான ஐரா படத்தின் டீஸர் இன்று யூட்டுபில் வெளியானது. இவருடன் முக்கிய கதாப்பாத்திரமாக கலையரசன், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். சார்ஜுன் கே. எம். இயக்கும் இப்படத்தில் நயன்தாரா முதல் முதலாக இரு வேடங்களில் நடிக்கிறார்.
“மறுபடியும் பொட்ட புள்ள போறந்துருச்சா?” என்று ஆரம்பிக்கும் இந்த டீஸர், பெண் சிசு படுகொலை பற்றியது. பவானி கதாப்பாத்திரத்தில் களமிறங்கிய நயன்தாரா பழைய காலத்து தோரணையில் கரிய நிறம் கொண்ட கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.
இன்னொரு கதாப்பாத்திரத்தில் நகர பெண்ணாக களமிறங்கியுள்ளார். இப்படம் திரில்லர் படம் போல டீசெரில் காட்சியளிக்கிறது. டீஸர் வெளியீட்டினை தொடர்ந்து, பட வெளியீட்டிற்கு ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்டன் காத்திருக்கின்றனர்
ஐரா டீஸர்: