விஸ்வாசம் பட குழுவிற்கு தமிழக காவல்துறை பாராட்டு !

படத்தின் காட்சிகளில் சீட் பெல்ட், ஹெல்மெட் அணிந்து நடித்திருப்பதற்கு ‘விஸ்வாசம்’ படக்குழுவினருக்கு காவல் துணை ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, அமோக வசூல் செய்து வருகிறது ‘விஸ்வாசம்’. இப்படத்தில் பைக்கில் வரும் காட்சிகளில் எல்லாம் ஹெல்மெட், காரில் வரும் காட்சிகளில் எல்லாம் சீட் பெல்ட் போட்டு நடித்திருப்பார் அஜித். இதனை சென்னை காவல் துணை ஆணையர் பாராட்டியுள்ளார்.
likeheartlaughterwowsadangry
0