விக்ரம் நடிக்கும் மஹாவீர் கர்ணா !

ஆர்.எஸ்.விமால் இயக்கி விக்ரம் நடிக்கும் மஹவீர் கர்ணா பல மொழி நடிகர்களையும் திரையில் காட்டவுள்ளது. நியூ யார்க்கினை சார்ந்த யுனைடெட் ஃபிலிம் ராஜ்யம் 300 கோடி செலவில் தயாரிக்கிறது.
விக்ரமின் எல்லா படத்தினை போலவே இப்படத்திற்காக 3 மாதங்களில் உடம்பை படத்திற்கேற்றப்படி மாற்றியுள்ளார் மேலும் குதிரை ஓட்டவும் படித்துள்ளார். விக்ரம் தற்போது வெளிநாட்டு ஸ்டண்ட் மாஸ்டர்களுடன் போர் கட்சிகளுக்கு தயாராகியுள்ளார்.

‘மஹவீர் கர்ணா’வின் தற்போதைய அட்டவணை 18 நாட்களுக்கு திட்டமிடப்பட்டு, குருக்க்ஷேத்ரா போர்க்கள காட்சியை படமாகாப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ஆயிரக்கணக்கான ஸ்டண்ட் மற்றும் ஜூனியர் கலைஞர்களும் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்று இயக்குனர் விமல் கூறினார். இப்படம் 32 மொழிகளில் வெளிப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் மலையாள நடிகர் பிருதிவி ராஜினை நடிகராக நியமித்து, 60 கோடி செலவில் தயாரிக்கலாம் என்று எண்ணிய இயக்குனர், பின்பு இப்படத்திற்கு கண்டிப்பாக அதிகம் செலவு ஆகும் என்பதினை உணர்ந்து ஜனவரியில் 300 கோடி செலவில் இப்படத்தினை விக்ரம் வைத்து நடிக்க முடிவு செய்தார்.
Follow us :