பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்?

பாடகி மற்றும் நடிகையுமான வசுந்தரா தாஸ் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வசுந்தரா தாஸ் நடிகையாக மாறிய பிரபல பாடகி ஆவார். இவர்1999ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான முதல்வன் திரைப்படத்தில் “ஷகாலக்க பேபி” பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்று பிரபலமானது. இதனை தொடர்ந்து ரிதம், குஷி உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.
இதனை தொடர்ந்து 2000ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கிய “ஹே ராம்” திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகில் நடிகையாக அறிமுகமாகியுளார். பின்னர் 2001ம் ஆண்டு தமிழில் அஜித் குமார் நடித்த “சிட்டிசன்” திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இது அவரது பிரபலத்தை மேலும் அதிகரித்தது. அதன் பின்னர் பல ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்த நிலையில் வசுந்தரா தாஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய வாய்ப்புள்ள போட்டியாளர்களின் பட்டியலில் உள்ளார் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கென ஒரு ரசிகர்கர்கள் பட்டாளம் உள்ளது. 100 நாள்கள் எவ்வித வெளி தொடர்பும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்பது தான் இந்த போட்டியின் விதி. 100 நாட்கள் வெளியில் என்ன நடக்கிறது என்ற எந்த தகவல்களும் போட்டியாளர்களுக்கு தெரியாது.
ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் வைக்கப்பட்டு ரசிகர்களின் வாக்குகள் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்பட்டு இறுதியாக வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பிக் பாஸ் முதல் சீசனில் நடிகர் ஆரவ், இரண்டாவது சீசனை நடிகை ரித்விகா, மற்றும் கடந்த வருடம் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முகென் ராவும் வெற்றி பெற்றார்கள். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக விஜய் டிவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.