ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த சம்பவம்- அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை கூறிய நடிகை

2017ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாட்டு இளைஞர்களை உலகமே புகழ்ந்த ஒரு சம்பவம் ஜல்லிக்கட்டு போராட்டம்.

ஒட்டுமொத்த மக்களும் ஒன்றாக இணைந்து இது எங்களது உரிமை, ஜல்லிக்கட்டு வேண்டும் என்று போராடினார்கள், இதில் மக்களோடு மக்களாக பிரபலங்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியாகவும் பிரபலங்கள் நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் செய்தனர். அந்த போராட்டத்தில் முதல் ஆளாக வந்த அஜித் எல்லோரிடமும் மரியாதையாக நடந்தார். ஒரு நடிகை வந்து அஜித் அவர்களிடம் எனக்கு உடம்பு சரியில்லை, சிகிச்சை பணம் இல்லை என்று கூறினார்.

உடனே அவர் தன்னுடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களை அழைத்து இவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யுங்கள் என்றார். ரசிகர்கள் புகைப்படம் எடுக்க வந்தால் நாம் என்ன விஷயத்துக்காக இப்போது வந்துள்ளோம், இங்கு புகைப்படம் வேண்டாமே என்று தன்மையாக கூறினார்.

அந்த நாள் இன்னும் என் கண் முன்னே இருக்கிறது என்று அஜித்தை பெருமையாக கூறியுள்ளார் நடிகை அபினயஸ்ரீ.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *