ஓய்வை அறிவித்தார் WWE ஜாம்பவான் அண்டர்டேக்கர்- ரசிகர்கள் வருத்தம்!

மல்யுத்த ஜாம்பவானான தி அண்டர்டேக்கர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த முப்பது வருடங்களாக தொழில்முறை மல்யுத்த விளையாட்டில் புகழ்பெற்ற வீரராக உள்ள தி அண்டர்டேக்கர், தன்னுடைய ஆவணப்படத்தின் கடைசிப் பகுதியில் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரையும் டபிள்யூடபிள்யூஈ தொழில்முறை மல்யுத்தப் போட்டிகளின் ரசிகராக மாற்றியதில் தி அண்டர்டேக்கரின் பங்கு அதிகம். இவருடைய மல்யுத்த ஆட்டங்களைத் தொலைக்காட்சிகளில் பார்த்து அவருக்குத் தீவிர ரசிகர்கள் உருவானார்கள். பயமுறுத்தும் உடல்மொழியும் ஆக்ரோஷமாகச் சண்டையிடுவதும் இவருடைய அடையாளமாகின. பொழுதுபோக்குக்காக நடைபெறும் டபிள்யூடபிள்யூஎஃப் போட்டிகள் (இவை பின்னர் டபிள்யூடபிள்யூஈ என மாற்றப்பட்டன) இவரை சூப்பர் ஹீரோவாக மாற்றின.

சர்வைவர் தொடரில் 1990-ல் அறிமுகமானார் தி அண்டர்டேக்கர். அடுத்த ஆண்டு உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஜெயித்தார். ரெஸ்ட்ல்மேனியா போட்டியில் 25-2 என்கிற அளவில் வெற்றி பெற்றுள்ளார். 21 முறை தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்தார். தி அண்டர்டேக்கரின் இயற்பெயர், மார்க் காலவே

முடியாது என்று எப்போது சொல்லாதீர்கள். என்னுடைய வாழ்க்கையின் இக்காலக்கட்டத்தில் மீண்டும் விளையாட எனக்கு ஆர்வம் இல்லை. நான் கைப்பற்றவேண்டியது இனி எதுவுமில்லை. நான் சாதிக்கவும் இனி எதுவுமில்லை. இந்த விளையாட்டு மாறிவிட்டது. புதிய வீரர்கள் உள்ளே வரவேண்டிய நேரமிது. இதுதான் சரியான நேரம். இந்த ஆவணப்படம் அதை அறிந்துகொள்ள உதவியது. என்னுடைய அறிவுக்கண்ணைத் திறந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

தி அண்டர்டேக்கருக்கு நன்றி தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள்.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *