தனுஷ், அஜித், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி

மோடி அவர்கள் ஜி.எஸ்.டி கொண்டுவந்ததற்கு பின் தியேட்டரில் படம்பார்ப்பது கொஞ்சம் பெரிய செலவாகியது. அதிகபட்ச வருவாய் அளவீடானது 28% ஆக இருந்தது இப்போது 18% ஆக டில்லியில் எடுக்கப்பட்ட முடிவில் மாற்றப்பட்டது பெரும் வரவேற்பை கொண்டுவந்துள்ளது.

நூறு ரூபாய்க்கும் மேல் உள்ள டிக்கெட்டுக்களுக்கு முன்பு இருந்த அதிகபட்சமான வருவாய் அளவீடான 28% வருவாயாக எடுக்கப்பட்டது. இப்போது, அதிகபட்சமான வருவாய் அளவீடான 18% ஆக டிக்கெட்டுக்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. முன்பு நூறு ரூபாய்க்கும் கீழுள்ள டிக்கெட்டுகள் 18% ஆக இருந்தது இப்போது 12% ஆக குறைக்கப்பட்டது. தற்போது தமிழ் திரையுலகில் கிருஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு நிறைய நல்ல படங்கள் வெளியாகும் நிலையில் இந்த முடிவு சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares