‘தளபதி 64’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு – புதிய அப்டேட்!‘தளபதி 64’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு தளபதி 64 என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதியும், ஜோடியாக மாளவிகா மேனனும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இன்னும் சில நாட்களில் படக்குழு டெல்லியிலிருந்து கர்நாடகாவுக்கு செல்ல இருப்பதாக தெரிகிறது.
கர்நாடகவில் உள்ள முக்கிய சிறைச்சாலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அங்கு விஜய், விஜய் சேதுபதி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட இருப்பதும் கூடுதல் தகவல்.முன்னதாக டெல்லியில் நடைபெற்ற படப்பிடிப்பில் கல்லூரி காட்சிகள் படமாக்கப்பட்டன. அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. மும்முரமாக படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.