“தமிழக அரசு பிரச்சனையை அடக்கியது” – பாராட்டுகிறார் ரஜினிகாந்த்

இந்து தமிழ் கடவுளான முருகரிடம் தன் உடம்பை பாதுகாத்துக்கொள்ள பாடப்படுவது கந்த சஷ்டி கவசம் இதை கொச்சை படுத்தி பேசியது கருப்பர் கூட்டம் என்கிற யுடூப் சேனல் பேசியது. இக்கருத்தை பலர் எதிர்த்தனர். இதனால் தமிழக பா.ஜா.க கொடுத்த புகாரின் பெயரில் இந்த சேனலை சார்ந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து நேற்று ரஜினிகாந்த் அவர்கள் ட்விட்டரில், மக்கள் மனம் புண்படும்படி இருந்த விடியோவை மிக வேகமாக தமிழக அரசு அழித்தது பாராட்டுக்குரியது என்றார். மேலும், “இப்படி வேறு மதங்களை அவமதிப்பது, மக்கள் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது இதோடு முடியட்டும். எல்லா மதங்களும் ஒன்றுதான்,” என்று ரஜினி கூறினார்.

இதை பற்றி கருப்பர் கூட்டம் சேனல் கூறுகையில், “பெரியாரின் பகுத்தறிவாளர் கொள்கையை பின்பற்றியே இந்த காணொளியை உருவாக்கினோம். இது பலரை புண்படுத்தியதால் நாங்கள் வருத்தமடைந்து அதை அகற்றிவிட்டோம்,” என்றனர்.

திராவிட முன்னேற்ற கழகம் எந்த ஒரு மதத்திற்கும் எதிர்ப்பு கிடையாது, என்றும் இப்படிப்பட்ட செய்கைகள் இக்கழகத்தின் தேர்தல் வெற்றியை பறிக்க செய்யப்பட்டது என்றும் தி. மு. க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *