சூர்யாவின் சர்ச்சை கருத்துக்கு உலக நாயகன் ஆதரவு

நடிகர் சூரியா அரசு அறிவித்த ‘புதிய கல்வி திட்டம்’ வரைவு அறிக்கை பற்றி அண்மையில் அவருடைய கருத்துக்களையும் எதிர்ப்பையும் கூறியிருந்தார். இதனால் பலர் அவர் கூறியதனை எதிர்த்தனர். மேலும் இது குறித்து ‘அவதூறு’ பரப்பும் ஆளும் கட்சியினரையும் கடுமையாக கண்டிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.

ஸ்ரீ சிவகுமார் நிறுவனத்தின் 40 ஆவது ஆண்டு விழாவின் போது பேசிய நடிகர் சூரியா, “இப்புதுய கல்வி திட்டத்தில் மூன்றாம் வகுப்பிலிருந்தே நுழைவு தேர்வுகள் நடத்தப்படுமென்று எழுதப்பட்டிருக்கிறது” என்றார்.

நீட் தேர்வு மட்டுமல்லாமல் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் நுழைவு தேர்வுகள் கொண்டுவரப்படுகின்றது என்பதை தெரிவித்து அதற்கு தனது எதிர்ப்பையும் தெரிவித்தார்.

“சமமான, தரமான கல்வி இல்லாமல் தற்போது நுழைவு தேர்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்” என்றார்.

மேலும் அவர், “30 கோடி மாணவர்களின் நிலைமையை நிர்ணயம் செய்யும் புதிய கல்வி வரைவு, இதனை யாரும் கேள்வி கேட்கவில்லை என்றபோது எனக்கு கோவம் வருகிறது” என்றார். ஆசிரியர்களின் தயவு இல்லாமல் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் மூன்று மொழிகளை திணிப்பது அவர்களுடைய வளர்ச்சியினை பாதிக்கும் என கண்டித்துள்ளார். மேலும் அவர், அனைத்து பெற்றோர்களும் மாணவர்களும் புதிய கல்வி அறிக்கையினை படித்து புரிந்துகொள்ளுமாறு வேண்டிக்கொண்டார்.

இதனை தொடர்ந்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவிற்கு ஆதரவு அளித்துள்ளார். பல ஏழை, நடுத்தர மக்களின் கல்விக்காக உழைபவர் நடிகர் சூரியா என்பதால் அவருக்கு கல்வி குறித்து பேச முழு உரிமையும் உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares