`என் கட் அவுட்டுக்கு பாக்கெட்ல வேணாம் அண்டாவுல பால் ஊத்துங்க’ – ரசிகர்களுக்கு சிம்புவின் அன்புக் கட்டளை !

`வந்தா ராஜாவாதான் வருவேன்’ பட ரிலீஸின் போது எனக்காக இந்த விஷயங்களை ரசிகர்கள் செய்தே ஆக வேண்டும் என நடிகர் சிம்பு அவரது ரசிகர்களுக்கு அன்புக் கட்டளை விடுத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் `வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வெளியீட்டின்போது “அதிக பணம் தந்தோ, பிளாக்கிலோ டிக்கெட் வாங்கி படம் பார்க்க வேண்டாம். தியேட்டரில் என்ன கட்டணம் வசூலிக்கிறார்களோ அதைச் செலுத்திப் பார்த்தால் போதும் , பேனர், ஃப்ளெக்ஸ் செலவுகளைத் தவிர்த்து பெற்றோர்களுக்குப் புது துணி எடுத்து உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்” எனத் தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் சிம்பு. இது பலரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சமூக வலைதளங்களில் சிம்புவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா, விளம்பரத்துக்காகத்தான் இதை அவர் செய்கிறார் எனவும் கருத்துகள் எழுந்தன.
இந்தக் கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மீண்டும் ஒரு விடியோவை சிம்பு வெளியிட்டுள்ளார். அதில், “தியேட்டரில் போய் படம் பார்க்கும் போது டிக்கெட்களை அதிகப் பணம் கொடுத்துப் பார்க்க வேணாம், அன்பைக் காட்டும் விதமாக ஃப்ளக்ஸ், கட் அவுட், பால் அபிஷேகம் வைக்கிறீங்க இதெல்லாம் பண்ணாதீங்க அதுக்கு பதிலா உங்க அப்பாவுக்குச் சட்டை, அம்மாவுக்குப் புடவை எடுத்துக் கொடுத்தா சந்தோஷப் படுவேன்னு சொல்லியிருந்தேன்.