சிம்புவுக்கு லண்டன் பெண்ணுடன் இன்று கல்யாணமா ?? களைகட்டிய சோசியல் மீடியா

தமிழ் திரையுலக ரசிகர்கள் மருதநாயகம் படம் எப்போது வெளியாகும் என ஆர்வமாக இருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் நடிகர் சிம்புவிற்கு எப்போ கல்யாணம் ஆகும் என பலர் ஆர்வமாக உள்ளனர்.
நீண்ட காலமாக பேச்சுலர் லைப் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் சிம்புவிற்கு இன்று 7ஆம் தேதி கல்யாணம் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் இன்று காலை முதல் பரவியுள்ளது. இந்த செய்தி குறித்து நடிகர் டி.ஆர் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி உஷா அவர்கள் விளக்கம் ஒன்றை கொடுத்தனர்.
நடிகர் சிம்புவிற்கு இன்று ஏழாம் தேதி கல்யாணம் என பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் பொய்யானது. நடிகர் சிம்புவின் ஜாதகத்தின் படி அவருக்கு ஏற்ற துணைவியை பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிம்புவிற்கு ஏற்ற பெண் கிடைத்தால் நாங்கள் சந்தோசமாக அனைவருக்கும் அறிவிப்போம் என சிம்புவின் தந்தை நடிகர் டி.ஆர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.