விஜய்சேதுபதி படத்தில் குட்டி சொர்ணக்கா !

மணிகண்டன் இயக்கியிருக்கும் ‘கடைசி விவசாயி’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் ஜெயலலிதா நடித்திருக்கிறார்.

காக்கா முட்டை’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். உலக அளவில் பெயர் வாங்கிய இப்படம் ரிலீஸாகி நல்ல விமர்சனமும் பெற்றது. தேசிய விருது வாங்கிய இப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் இப்படம் மூலமாகக் கவனிக்கப்பட்டனர்.

இவர், இப்படத்தை மராத்தி மொழியிலும் டைரக்டஷன் பண்ணினார். பிறகு, ‘குற்றமே தண்டனை’ ‘ஆண்டவன் கட்டளை’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்நிலையில், சில இடைவெளிக்குப் பிறகு தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘கடைசி விவசாயி’ படத்தை எடுத்திருக்கிறார்

‘விவசாயிகள்’ பிரச்னையை இப்படத்தின்மூலம் சொல்லவருகிறார் மணிகண்டன். ராமையா என்ற பெயரில் முருகன் பக்தரா இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். தவிர, யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையில், குட்டி சொர்ணக்கா என்று இணையத்தில் வைரலான குட்டிப் பொண்ணு ஜெயலலிதாவும் இப்படத்தில் நடித்திருக்கிறார்.

முதலில் இவரை ராமநாதபுரத்தில் பார்த்த இயக்குநர், இவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க வேண்டுமென்று ஸ்க்ரிப்ட்டில் இவருக்கான கேரக்டரை சேர்த்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதுதான் இவர் பிரபலமானார். இப்படத்தை மணிகண்டனே தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares