நகரங்களில் ஜொலிக்கும் சூர்யாவின் சூரரை போற்று !

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சூரரை போற்று’. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தை, ‘இறுதி சுற்று’ படத்தை இயக்கிய பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்த படத்தை 2 டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஷிகியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். நிகீத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ‘சர்வம் தாளமயம்’ படத்தில் நடித்தவர்.
தற்போது இப்படத்தின் பாடலை நகரங்களின் முக்கிய பகுதிகளில் ஜொலிக்கும் எல் இ டி திரை மூலம் புரமோட் செய்யப்பட உள்ளது.