தந்தை பிறந்த நாளில் அடுத்த படத்தின் அப்டேட் வெளியிட்ட சிவகார்த்திகேயன் !

கனா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்திருந்தார்.இந்த படம் ரிலீசாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.2017-ல் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு படம் அருவி.

சிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படத்தை அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்த படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் Firstlook இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த படத்தின் Firstlook வெளியாகியுள்ளது.இந்த படத்திற்கு வாழ் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக பெயரிட்டுள்ளனர்.இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.