சில்க் ஸ்மிதாவின் கதை திரைப்படம் ஆகிறது – ‘அவள் அப்படித்தான்’

சில்க் ஸ்மிதாவின் கதையின் அடிப்படையில் ஏற்கனவே பாலிவுட்டில் தி டர்டி பிக்சர் படத்தில் வித்யா பாலன் அருமையாக நடித்திருந்தார். இதனை அடுத்து, தமிழில் சில்க்கின் கதை கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கிய கே. எஸ். மணிகண்டன் இயக்க உள்ளார்.
அவர் இது குறித்து கூறுகையில் “ஸ்மிதாவின் வெற்றிக்கு காரணம் அவளுடய அழகிய கண்கள்” என்கிறார். “இன்றுள்ள தலைமுறைக்கு தெரியாது எந்தளவுக்கு கூச்சமின்றி துணிச்சலாக கவர்ச்சிகரமாக நடித்து வந்தவர் சில்க் ஸ்மிதா என்று, அதை எடுத்து கூறவே இப்படம்.

அவள் அப்படித்தான் படத்தில் ஸ்மிதாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல திருப்பு முனைகளை காணலாம்,” என்று கூறினார். மேலும், அவர் இந்த கதாபாதிரத்திரற்கு நியாயம் செய்யும் நடிகை யாரென்று தேடி வருகிறார்.
“80’களிலும் 90’களிலும் பெரும் மக்கள் கூட்டத்தை திரையரங்கிற்கு முன் குவித்து போட்ட சில்குக்கு நிகராக இன்று வரை எந்த நடிகையும் வரவில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.
Follow us :