கல்லூரி தேர்வுகள் ரத்தாகிறது ? தமிழக அரசு தரப்பில் விளக்கம்

தமிழகத்தில் தற்போது கொரோனா நோய் பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது .
இருப்பினும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் பாதி நடைபெற்று முடிந்து இன்னும் சில தேர்வுகள் நடத்தாமல் இருப்பில் உள்ளது அவற்றிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட உடன் கல்லூரி மாணவர்கள் தங்களுக்கும் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்குமாறு ஃபேஸ்புக் டுவிட்டர் போன்ற இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து டிரெண்டிங்கும் செய்தனர்
இந்நிலையில் இது குறித்து தமிழக அரசு தரப்பில் இன்று கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஒருவேளை ஒரு நோயின் தாக்கம் இருப்பதை விட அதிகரித்தால் கட்டாயமாக கல்லூரி தேர்வுகள் இரத்து செய்வது தான்வழி மேலும் இது போன்ற தகவல்களுக்கு டீம் குழுவில் இணைய தளத்தை பின் தொடரவும்