யூடியூபில் தாறுமாறு பண்ணும் ரவுடி பேபி பாடல்!

தனுஷ் நடித்த ‘மாரி 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூபில் புதிய சாதனையை படைத்துள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த டிச.21ம் தேதி வெளியான ‘மாரி 2’ திரைப்படத்தில் தனுஷ், சாய் பல்லவி, ரோபோ ஷங்கர், வரலக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் யுவன் இசையில் உருவான ‘ரவுடி பேபி’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தனுஷ் எழுதி பாடிய இப்பாடலுக்கு இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். இந்தப் பாடலில் தனுஷ் – சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், ஒவ்வொரு வாரத்திலும் மக்களால் அதிகம் கேட்கப்பட்ட, விரும்பப்பட்ட பாடல்களின் பட்டியலை வெளியிடும் பில்போர்ட் என்ற சர்வதேச பாடல்கள் தரவரிசை பட்டியலில், ரவுடி பேபி பாடல் டாப் 5 பாடல்களில் 4வது இடத்தைப்பிடித்து புதிய சாதனை படைத்தது.

தற்போது அதைத் தொடர்ந்து யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் இப்பாடலை 10 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். ஏற்கனவே தனுஷின் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் 10 கோடி பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares