பாகுபலி சாதனையை வீழ்த்தியது சூப்பர் ஸ்டாரின் 2.0

சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 2.0, பாகுபலி-2 படத்தை வைத்து வசூல் ரீதியாக ஒப்பீட்டு பார்க்கப்பட்டுள்ளது.

ஏனெனில் தென்னிந்திய சினிமாவின் பெருமையை உலக அளவில் எடுத்து சென்றதில் பாகுபலி-2விற்கு பெரும் பங்கு உள்ளது. அந்த வகையில் இப்படத்தின் வசூலை இந்தியாவில் வேறு எந்த படங்களும் முறியடிக்காமல் இருந்து வந்தது.

தற்போது பாகுபலி-2 தமிழ் வெர்ஷன் வசூலை 2.0 முறியடித்துள்ளது, இப்படத்தின் தமிழ் வெர்ஷன் மட்டும் குறைந்தது ரூ 200 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தலைவர் ரஜினிகாந்த் தான் மீண்டும் நம்பர் 1 என நிரூபித்து உள்ளார்.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares