நாங்க ரஜினி ரசிகர் என்று கெத்தா சொல்ல சில காரணங்கள் !

Superstar Foreign Fans

நாங்க ரஜினி ரசிகர்கள் என கெத்தா சொல்வதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு.. அவற்றில் சில :

 • சிவப்பானவர்கள் ஹீரோவாக முடியும் என்ற இமேஜை முதன் முதலாக உடைத்தவர்!
 • குழந்தைகளுக்கும் பிடித்த முதல் தமிழ் கதாநாயகன்!
 • அவரது நடையின் வேகத்தை கண்டு அசராதவர்களே இல்லை!
 • சிக்ஸ்பேக் இல்லாமலேயே ஆக்ஷன் காட்சிகளில் ரசிக்க வைத்தவர்!
 • சினிமாவைத் தவிர பிற இடங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் எளிமையாகவே வலம் வருபவர்!
 • துணிச்சலாக பேசுபவர்.. துணிச்சலாக பேசினால் ஆதரவு தருபவர்!
 • உலக நாடுகளில் அதிக நாட்டு மக்களை கவர்ந்த ஒரே தமிழ் ஹீரோ!
 • தன் முதல் காதல் தோல்வியில் முடிந்ததை, அதுவும் ஒரு பெண் தன்னை பிடிக்கவில்லை என்று சொன்னதை வெளிப்படையாக சொன்னவர்!
 • சக நடிகர்களுக்கும் பிடித்த நடிகர்!
 • எல்லா அரசியல் தலைவர்களுக்கும் கட்சி பாகுபாடின்றி நெருக்கமாக இருப்பவர்!
 • அவர் பெயரை பயன்படுத்தி தான் பிற ஹீரோக்கள் கைதட்டு வாங்குவர், அவர் இதுவரை யார் பெயரையும் பயன்படுத்தியது கிடையாது!
 • ரசிகர்களின் குடும்பங்களின் மீதும் அக்கறை எடுத்துக்கொள்ளும் ஒரே ஹீரோ!
 • அவர் இடத்தை பிடிக்க தான் பல நடிகர்கள் துடித்துக் கொண்டிருந்தாலும் அவர் இடத்தில் அவர் மட்டுமே இருக்கின்றார்.. பிடிக்க நினைத்த நடிகர்கள் தாம் மாறிக்கொண்டே உள்ளனர்!
 • தான் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதை இன்றும் மறக்காதவர்!
 • தான் சூப்பர் ஸ்டார் என்பதை மறந்து கமலின் திறமைக்கு உரிய மரியாதை அளிப்பவர்!
 • தனக்கு இருந்த கெட்ட பழக்கங்களையும் மறைக்காமல் வெளிப்படையாக சொன்ன ஒரே ஹீரோ!

இன்னும் இருக்குங்க நிறைய..!

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares