இது தான் சூப்பர்ஸ்டார் குணம் !

ஒரு நாள் ரஜினி அவர்கள் தன் நண்பர்களுடன் சேலத்திலிருந்து சென்னை சென்று கொண்டிருந்தார் அப்பொழுது ஒரு ரோட்டோர ஹோட்டலில் காரை நிறுத்தி சாப்பிட உள்ளே சென்றார்,
அவர் அப்பொழுது தன் முகத்தை துண்டால் மூடி யாரும் அடையாளம் கானாதவாரு மரைத்தவாறே சாப்பாடு ஆர்டர் செய்துவிட்டு ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்து கொணேடிருந்தார்,

அப்போது ஹோட்டல் எதிரே தரையில் ஒரு பெண் கை குழந்தை மற்றும் சின்ன பையனுடன் ஹோட்டலையே பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தனர், அந்த சின்ன பையன் அப்பப்போம் தன் கையை வயிற்றில் வைத்து பசியால் அழுக அந்த பெண் ஹோட்டலை காட்டி ஏதோ சொல்ல அந்த பையன் அமருவதுமாக இருந்தது,

இதை கவனித்த ரஜினி சர்வரிடம் யார் அவர்கள் ஏன் இந்த நேரத்தில் இப்படி ரோட்டில் உக்காந்து ஹோட்லையே பார்க்கிறார்கள் என்றார்,
அந்த சர்வர் தினமும் இரவு 10 மணிக்கு மிஞ்சிய சாப்பாட்டை அவருக்கு கொடுப்போம் சாப்பிட்டு போய்விடுவார் அதற்காக காத்திருப்பதாக கூறினார்,

இதை கேட்ட ரஜினியால் சாப்பிட முடியவில்லை உடனே தம்பி அவர்களுக்கு முதலில் பார்சல் கட்டிதாங்கன்னு சொல்லி, பார்சல் வந்ததும் தன் நண்பர் ஒருவரை துனைக்கு அழைத்துக் கொண்டு அந்த பெண் அருகில் சென்று இந்தாமா இந்த சாப்பாட்டை முதலில் குழந்தைகளுக்கு கொடுத்து நீயும் சாப்பிடு என்றார்,

அந்த பெண் தயங்க ரஜினி என்னை உன் தந்தை போல நினைத்து இதை வாங்கிக்கொள் என்று சொல்ல அவர் அதை வாங்கி சாப்பிட்டார்கள், ஏன்மா நீ இங்க இருக்குற உன் தாய் தந்தை கணவர் எங்கேன்னு கேட்க,
தாய், தந்தை சின்ன வயசுலையே இறந்துட்டாங்க அண்ணண்தான் என்ன வளர்தார், பிறகு சின்ன வயசுலையே கல்யாணம் பன்னிவச்சிட்டாங்க,

என் புருசன் ரொம்ப குடிப்பாரு நான் தான் தையல் படித்ததால் சின்ன கடைகளில் வேலை செய்து காப்பாத்தினேன், அவர் நோயால் இறந்துவிட்டார் இப்போம் அண்ணண் வீட்டுல இருக்கேன் இங்கு வேலை கிடைக்கவில்லை அண்ணணும் வெளியூர் போயிருவாரு மாசத்துக்கு 2 நாள்தான் ஊருக்கு வருவார் அதனால் அண்ணி கொடுமை தாங்கல சார்,
அதனால இப்படி சாப்பிட்டு இரவு படுக்க அண்ணண் வீட்டுக்கு போய்ருவேன்னு வாழ்க்கைய சொன்னார்,

இதை கேட்ட ரஜினி உடனே போன் செய்தார் 2 காரில் பத்துபேர் வந்தாங்க அவர்கள் ரஜினியை பார்த்ததும் தலைவானு கத்தினார்கள் உடனே ரஜினி வேண்டாம் என்றவாரு, அவர்களிடம் ஏதோ சொல்ல அவர்கள் சரி தலைவானு சொல்ல, ரஜினி மீண்டும் அந்த பெண் அருகில் வந்து இந்தாம்மா இந்த பணத்தை இப்போதைக்கு வைத்துக்கொள் நாளை நீ விரும்பும் இடத்தில் உனக்கு ஒரு கடை அமர்த்தி 10 தையல் எந்திரம் வாங்கி கொடுத்து இவர்கள் உனக்கு உதவி செய்வார்கள் என்று ரஜினி சொன்னார்,

உடனே அந்த பெண் கண்ணீர் மல்க நீங்க யாருயா? என் தந்தையை நான் பார்த்ததில்லை உங்களை என் தந்தையாக பாக்குறேன்னு சொல்லி கும்பிட ரஜினி சிரித்தபடியே ஒன்றும் சொல்லாமல் காரில் அமர்ந்து அந்த ரசிகர்களுக்கும் அந்த பெண்ணுக்கும் கை அசைத்தபடி கிழம்பிவிட்டார்,
மறுநாள் ரஜினி சொன்னடியே சேலம் மாவட்ட ரசிகர்கள் அந்த பெண்ணுக்கு அனைத்தையும் ரெடிபன்னி கொடுத்துவிட்டனர்,

அந்த பெண் அந்த ரசிகர்களிடம் எனக்கு உதவி செய்த அந்த Sir யாருனு நீங்களாவது சொல்லுங்க அண்ணேண்ணு கேட்க ரசிகர்கள் அவர் மனிததெய்வம் அம்மானு சொல்லிட்டு வந்துட்டாங்களாம்(நான் யார் என்று சொல்லக் கூடாது என்று தவைவர் கட்டனையிட்டு விட்டாராம்)

.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares