தனிக்கட்சி துவங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- விறுவிறுவென ஆரம்பித்த பணிகள் !

2017ம் ஆண்டின் இறுதியில், நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன், 234 தொகுதிகளிலும் நிற்போம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்தார். அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்து முழுமையாக இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.
இந்நிலையில் ரஜினி தனது தனிக்கட்சி ஆரம்பிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிஏஏவிற்கு நேரடியான ஆதரவு என மத்திய அரசிற்கு ஆதரவான கருத்துகளையே அழுத்தமாக ரஜினி பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் மார்ச் அல்லது ஏப்ரலில் கட்சி ஆரம்பிப்பது என முடிவு செய்துள்ள ரஜினிகாந்த், மக்களுடன் இணைந்து இயங்கவும் தயாராகிவிட்டார் எனவும் அவரது நெருங்கிய நண்பர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி பயணம் மேற்கொண்டது போல தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பயணம் செய்து ஆதரவு திரட்டுவதுதான் ரஜினிகாந்த் அவர்களது திட்டம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.