எனக்கு மட்டும் ஏன் இப்படி பண்ணீங்க- இளையராஜாவை மேடையில் கலாய்த்த ரஜினிகாந்த் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் பேட்ட படம் திரைக்கு வந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.
இந்நிலையில் ரஜினிகாந்த் நேற்று இளையராஜாவிற்கு நடந்த சிறப்பு நிகச்சியில் கலந்துக்கொண்டார்.
அதில் இவர் ‘என்ன சாமி இப்பெல்லாம் உங்களுக்கு நிறைய பணம் வருதுல்ல(காப்பிரைட்ஸாக இளையராஜா தன் பாடலுக்கு பணம் கேட்டது), அப்பறம் என்ன’ என்று ரஜினி கேட்டார்.
அதற்கு இளையராஜா ‘அது கூட என் பாடல்கள் மூலம் தான் வருகின்றது’ என்றார்.
மேலும், என்னை விட கமலுக்கு தான் நீங்கள் நல்ல பாடல்களை கொடுப்பீர்கள் என்று ரஜினி சொல்ல மேடையை அதிர்ந்தது.
உடனே இளையராஜா ‘கமல் என்னிடம் இதை தான் சொல்கின்றார், நீங்கள் ரஜினிக்கு தான் நல்ல பாடல்களை கொடுப்பீர்கள் என்று’ என சொல்ல அரங்கம் முழுவதும் சிரிப்பலை தான்.