மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது ரசிகருக்காக நடிகர் ரஜினிகாந்த் பிரார்த்தனை!

நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான முரளி என்பவர், மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் தனது கடைசி ஆசையை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “தலைவா என் இறுதி ஆசையானது, 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவருக்காக நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், சிகிச்சை பெற்று வரும் தனது ரசிகரை தைரியமாக இருக்க அறிவுறுத்தியுள்ளார். முரளி விரைவில் மீண்டு வர இறைவனிடம் தான் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள ரஜினி, குணமடைந்த பிறகு குடும்பத்துடன் தனது வீட்டிற்கு வருமாறும் அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.