ரஜினி பிஸி- மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ்

கைதி, மாநகரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை தமிழ் திரையுலகிறக்கு கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தையும் இயக்கியுள்ளார். அடுத்தபடியாக ரஜினிக்கு ஹிட் படம் கொடுக்க முன்வந்தார்.

ஆனால், சிவா இயக்கும் ரஜினியின் 168 வது படமான அண்ணாத்த பட ஷூட் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறது. மேலும், கொரோனா நோய் பரவுதல் காரணமாக இந்தியா முழுக்க எல்லா படபிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாலும் ரஜினியின் அடுத்த படம் இயக்குவது தற்சமயம் கைவிடப்பட்டது.

அதனால் நேரத்தை வீணடிக்காமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெலுங்கு திரையுலகில் களமிறங்கியுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜூன் அல்லது மகேஷ் பாபுவை வைத்து சின்ன பட்ஜெட்டில் நல்ல படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். இப்படத்தை தெலுங்கு மற்றும் தமிழிலும் படம் இறக்க முடிவு செய்துள்ளார். மேலும் கார்த்தியின் கைதி-2 படத்தையும் இயக்க முடிவு செய்துள்ளார்.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares