தம்பி தங்கை என கூறுவது வெறும் வார்த்தைக்கு அல்ல உணர வைத்த நடிகர் சிவகார்த்திகேயன் !

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகன் (Prince of Kollywood) சிவகார்த்திகேயன் ! தனது எல்லா விழாக்களிலும் , மேடைகளிலும் மறக்காமல் எனது ரசிகர்கள் ஆனா என் தம்பி ,தங்கை என்று உரிமையோடு கூறுபவர் சிவா . எப்போதும் அனைவருக்கும் பாரபட்சமின்றி அன்பை வெளிப்படுத்தி வரும் சிவா நேற்று மேலும் ஒரு நெகிழ்ச்சியான தருணத்தை செய்துள்ளார் !
தல அஜித் ரசிகர் ஒருவர் தேனியில் வசித்து வருகிறார் சிவகார்த்திகேயன் நடி த்து வரும் 16 வது படத்தின் படபிடிப்பு தற்போது தேனியில் நடைபெற்று வருகிறது அப்போது அங்கு அவரை கான தல அஜித் ரசிகர் (சத்யா) வந்து காத்திருந்தார் ஆனால் அவரால் சந்திக்க முடியவில்லை !
அப்போது டிவிட்டரில் (2 மணி நேரம் காத்திருந்து உங்களை கான முடியவில்லை என டிவிட்டரில் சிவாவை டேக் செய்து டிவிட் செய்தார். பின்பு அதனை கண்ட சிவா அவரை மறுநாள் படபிடிப்பு தளத்திற்கு அழைத்து அவருடன் போட்டோ எடுத்து அனுப்பி வைத்தார் இந்த சம்பவம் பலருக்கு சிவா வின் தூய்மை யான அன்பை காட்டியுள்ளது