சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து ! டிரெய்லர் தேதி கசிந்தது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்து உள்ள பேட்ட படத்தின் மீதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்து முடிந்துள்ளது. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளுக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த ஒரு விருந்து என்றே சொல்லலாம்.

மற்றபடி பேட்ட படத்தின் எந்த ஒரு விஷயத்தையும் அதில் லீக் செய்யவே இல்லை. முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைலிஷான விஷயங்களை மட்டுமே அதில் காட்டி இருந்தார்கள். இதை அடுத்து அந்த டீசரின் முடிவில் ‘பேட்ட டிரைலர் கம்மிங் சூன்’ என போட்டு இருந்தார்கள். இந்த டிரைலர் எப்போது வரப் போகிறது என்பதுதான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று டிரைலர் வெளியாகும் என்று ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால் இப்போது நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து ஒரு செய்தி வந்துள்ளது. டிசம்பர் 25ஆம் தேதி பேட்ட படத்தின் டிரைலர் வெளியாக போவதில்லை. அப்புறம் எப்போது வெளியாகும் என்று உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு அன்று பேட்ட படத்தின் டிரைலர் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி இல்லையென்றால் அதற்கு முதல் நாள் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

கண்டிப்பாக இந்த 2 நாட்களில் ஏதாவது ஒன்றில் கண்டிப்பாக பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி 10ஆம் தேதி படம் வெளியாகும் சூழலில் இவ்வளவு தாமதமாக ஏன் டிரைலரை வெளியிடுகிறார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். சரி, பேட்ட படத்தின் டிரைலர் எப்போது வெளியானால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்..?

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *