அதிரடி தள்ளுபடி விலையில் விற்பனையாகும் ஒன்பிளஸ் 6 டி போன்கள்!

இந்த ஆண்டின் இறுதியில் ஒன்பிளஸ் நிறுவனம் தங்களது சார்பாக ஒரு சர்ப்ரைஸ் விற்பனை நடத்தவுள்ளது. சில மாதங்களுக்கு முன் ஒன்பிளஸ் நிறுவனத்தால் ரூபாய் 37,999க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 6டீ வகை ஸ்மார்ட்போன்கள் தற்போது தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

வரும் டிசம்பர் 29 முதல் ஜனவரி 6 வரை பல சலுகைகள் அளிக்கப்பட உள்ளன. அவைகளில் உடனடி தள்ளுபடி, வட்டியில்லா தவணை வசதி மற்றும் பழய போன்களுக்கு எக்ஸ்சேஞ் விலை போன்ற மக்களை கவரும் தள்ளுபடிகள் உள்ளன.

மேலும் அமேசானில் எச்.டி.எப்.சி. வங்கி கார்டுகள் மூலம் வாங்குபவர்களுக்கு தவணை வசதி திட்டத்தில் கூடுதலாக 1500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். மேலும் பழைய ஒன்பிளஸ் போன்களை ஆன்லைன் சைட்டிலே அல்லது கடைகளில் எக்ஸ்சேன்ஞ் முறையில் கொடுத்து வாங்கினால் கூடுதலாக ரூபாய் 2,000 குறைக்கப்படும்.

இந்த 6.41 இஞ்சு ஆப்டிக் அமோலெட் டிஸ்ப்ளே, டியல் கேமரா,10 ஜிபி ரேம், குயால்கோம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்.ஓ.சி, 3,700 mAh பாட்டரி பவர் மற்றும் 20 மெகா பிக்சல் கேமரா என மக்களை கவரும் வகையில் உள்ள பல அம்சங்களுடைய இந்த போனை தள்ளுபடி விலையில் வாங்க மூடியும்.

0

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares