என் வாழ்க்கையின் மந்திரம் சிவகார்த்திகேயன் !

This article Written by Prem Kumar

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் அப்போது நான் டிவிட்டர் இல் இருந்தேன் அந்த காலகட்டத்தில் எனக்கு சிவா அண்ணாவை நல்ல சினிமா கலைஞர் ஆக எனக்கு தெரியும் !

அறுவை சிகிச்சைக்கு முன்பு அண்ணன் சிவகார்த்திகேயன் உடன் டிவிட்டர் இல் ஒரு முறை பேச வேண்டும் என நினைத்தேன் !

அப்போது டிவிட்டரில் எனக்கு சில சிவா அண்ணா ரசிகர்களை தெரியும் . அவர்கள் தங்கள் டிவிட்கள் மூலம் இதனை சிவா அண்ணாவிடம் பகிர்ந்து வந்தனர் .

அப்போது சிவா அண்ணா டிவிட்டர் இல் எனக்கு ” எல்லாம் சரி ஆகிவிடும் நீங்கள் கவலை கொள்ளவேண்டாம் நீங்கள் சரி ஆனதும் உங்களை தொடர்பு கொள்கிறேன் என்றார் .

அதே போல் அறுவை சிகிச்சைக்கு நல்ல படியாக முடிந்தது பிறகு டிவிட்டர் இல் மீண்டும் டிவிட் செய்தேன் !

ஆனால் அப்போது எனக்கு ரிப்பிளே வர வில்லை ! ஒரு நாள் அண்ணனிடம் இருந்து போன் வந்தது
எப்படி இருக்கீங்க தம்பி , உடம்பு பரவாயில்லையா என்றார்” பிறகு உங்களை ஒருநாள் சந்திக்கிறேன் என்றார்” அன்று என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் !

பிறகு 2017 சென்னை ரசிகர்கள் சந்திப்பில் அண்ணனை கான சென்றேன் !

அருகில் சென்று அண்ணா நான் பிரேம் என்று என்னை அறிமுக படுத்த தொடங்கிய போது சிவா அண்ணா “எனக்கு தெரியும் பிரதர் நியாபகம் இருக்கு உங்க போட்டோ பார்த்தேன் என்று கூறினார் பின்பு போட்டோ எடுத்து வந்தேன்

பின்பு நான் சினிமா துறையில் சிறிது சிறிதாக முன்னேறி வந்த காலத்தில் சிவா அண்ணா தொடர்பு எனக்கு நெருங்கியது …

என் பிறந்த நாள், நான் எதாவது புதிய முயற்சி செய்தால் அதை அவர் இடம் தெரிவிப்பேன் அவரும் எனக்கு வாழ்த்து சொல்லுவார்

28-01-2019 அன்று சேலம் மாவட்டத்தில் ரசிகர் சந்திப்பு நடைப்பெற்றது
அதில் கலந்து கொண்டேன்
அப்போது அங்கு அதிகம் கூட்டம் எப்படி அண்ணனை காண்பது என தெரியவில்லை
எனவே அகில இந்திய சிவகார்த்திகேயன் நற்பணி மன்றம் உறுப்பினர்களும் எனக்கு உடன் பிறந்த சகோதரர்கள் போல் நான் சாதிக்க எடுக்கும் புதிய முயற்சிகளை எப்போதும் ஊக்குவி ப்பார்கள் அவர்களிடம் கூட்டமாக உள்ளது என்றேன் உடனே ஒரு மூன்று நபர்களை அனுப்பி கூட்டம் களையவைத்து என்னை அழைத்து சென்றனர் அப்போது படிக்கட்டு ஏறும் போது தூரத்தில் என்னை கண்ட சிவா அண்ணா உடனே அருகில் வந்து எனது கையினை பிடித்து மேடைக்கு அழைத்து சென்றார் பிறகு ” உங்கள் அப்டேட்ஸ் பாக்குறேன் நல்ல பண்றீங்க வாழ்த்துக்கள் என்றார் பின்பு உங்களை நான் குடும்பத்துடன் சந்திக்க வேண்டும் என்றேன் சரி நான் கண்டிப்பா சொல்கிறேன் என்றார் .

இது என் வாழ்வில் இது மறக்க முடியாத தருணம் .

என்றும் அண்ணன் சிவா வழியில் பயணிக்க விரும்புகிரேன்

அண்ணாவின் நம்பிக்கை வார்த்தைகள் ஒரு சாதாரண ஒன்னும் சாதிக்காத இருந்த என்னை இப்போது ஒரு பாடலாசிரியர்,சினிமா செய்தி தொடர்பாளர், (Media website owner) இணையதள இயக்குனர் என பல முயற்சிகளுக்கு என்னை ஊக்குவித்து
வருகிறது . மேலும் பல்வேறு சிவா அண்ணா ரசிகர்கள் எனது சகோதரர்கள் , சகோதிரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்…

My sincere thanks to Team Kollywood website for This article 😊🙏

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *