30% பால், 70% ரசாயன கலப்படம்

மத்திய பிரதேசம் மோரினா நகரை தலைமையாக கொண்டு நடக்கும் பாலகத்தில், 10,000 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டது.

பாலென்றால் தண்ணீர் மட்டும் கலப்படம் இல்லை: இந்த பாலை ஆய்வக சோதனையில் உட்படுத்திய போது இதில் 70 சதவீதம் ரசாயனம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தற்போது ‘சிந்தெடிக் பால்'(synthetic milk) என அழைக்கின்றனர்.

ஆய்வக சோதனையில் பாலில் ஷாம்பூ, சோப்பு பொடி, சோடியம் தையோசல்பேட் உள்ளிட்ட மலிவான ரசாயனங்கள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

‘சரி, சிறிய பால் நிறுவனங்கள் தான் இப்படி, பிரபலமான பால் நிறுவனங்களில் வாங்கினால் தப்பிக்கலாமே!’ என்று தோன்றும். அங்கேதான் நாம் தவறு செய்கிறோம்.

இந்த கலப்பட காரர்கள் பிடிபடாமல் இருக்க பிரபல பால் நிறுவனத்தின் பெயரில் பேக்கட்டுகள் போட்டு விற்பனை செய்கின்றனர். ஒரு லிட்டர் கலப்பட பால் தயாரிக்க வேறும் ரூ.5 ஆகிறது. இதை ரூ.40-ரூ.50 வரை விற்பனை செய்கின்றனர்.

இதுகுறித்து தற்போது அறுபத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை தேடி வருகின்றனர். இவர்கள் உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
கலப்பட பால் இந்தியாவில் அதிகரித்து வருகின்றது. இதனால் எவ்வளவு மக்களின் உடல்நலம் பாதிப்புக்குள்ளாகிறது?! என்பதையெல்லாாா மனதில் கொண்டு நீதிமன்றம் கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும்.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares