நடிகர் தளபதி விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம் ! வருமான வரி சோதனை

மாஸ்டர் படப்பிடிப்புத் தளத்தில் சோதனை:
விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை:
நெய்வேலி என்எல்சி 2வது சுரங்கப் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பில் பரபரப்பு.
சென்னையில் சினிமா தயாரிப்பாளர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை ரெய்டு.
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்த நிலையில் கடலூர் நெய்வேலியில் நடைபெற்ற விஜய் படப்பிடிப்பில் நேரில் சம்மன் அளிக்கப்பட்டது.
சம்மனை நேரில் பெற்றுக்கொண்ட நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் .
இதன் காரணமாக மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது