மாரி2 அடுத்தது மாரி3?

தனுஷ் மற்றும் ‘அராத்து’ ஆனந்தியாக சாய் பல்லவியும் நடித்துள்ள மாரி 2 நாளை உலகெங்கும் திரையிடப்பட உள்ளது. விஜய் சேதுபதி நடிக்கும் சீதக்காதி இன்று வெளியான நிலையில் பாக்ஸ் ஆபீஸ் குவியும் வாய்ப்பிருக்கிறது. “ஐந்து படத்துடன் மாரி2 போட்டியாக திரை இறக்குவது கடினமான போட்டியாக தான் நினைக்கிறேன்,” என்று தனுஷ் கூறியுள்ளார்.
“மாரி படத்தினை விட மாரி2 மிகவும் உணர்வுமிக்க திரைப்படமாக இருக்கும்” என்று தனுஷ் கூறியுள்ளார்.
2015 இல் இறங்கிய மாரி படத்தில் காஜல் அகர்வாலுடன் தனுஷ் நடித்த படத்தின் தொடராக மாரி2 அமைந்து உள்ளது. ஆனால் இப்படத்தில் தனுஷ் அதே கதாப்பாத்திரமாக இருந்தாலும் காஜல் அகர்வாலுக்கு பதிலாக சாய் பல்லவி, தனுஷ் ஜோடியாக நடிக்கிறார்.
மாரி 3
சாய் பல்லவி என்னை விட மிகவும் நன்றாகவே நடிக்கிறார் மேலும் கிலிசெரின் எதுவும் உபயோகிக்காமலே அழுது நடித்தார் என்று சாய் பல்லவிக்கு புகழாரம் சூட்டினார் தனுஷ். “மாரியாக நடிக்கும்போது கவலையை மறந்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, மாரி 2 நன்றாக திரையரங்குகளில் ஓடினால் மாரி 3 நடிப்பேன்” என்று கூறினார்.