இந்தாண்டு எனக்கு சிறப்பாக அமைந்தது திரைப்பட பாடலாசிரியர் அருண் பாரதி !

தமிழ் சினிமாவில் பிரபலமாகி வரும் பாடலாசிரியர்களில் ஒருவர் அருண் பாரதி இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் பல திரைப்படங்களில் பாடல்களை எழுதியுள்ளார்.
சண்டக்கோழி 2, விஸ்வாசம், தில்லுக்கு துட்டு 2, களவாணி 2, திமிரு புடிச்சவன், வால்டர், சிதம்பரம் ரயில்வே கேட் போன்ற படங்களில் பாடல்களை எழுதியுள்ளார்
மேலும் பாம ருக்மணி, ரோஜா, அனுமான்,விநாயகர்,கல்யாணமாம் கல்யாணம் போன்ற சின்னத்திரை தொடர்களிலும் பாடல் எழுதியுள்ளார்.
“இந்தத் தருணத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், என் பாடல்களைப் பாடிய பாடகர்கள், பாடகிகள், மற்றும் என் பாடல்களை பிரபலமாக்கிய ரசிகர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவித்தார்.
