தபால் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட காந்தியின் கண்ணாடி !

இங்கிலாந்தில் பிரிஸ்டல் நகரத்தில் ஆகஸ்ட் 21ம் தேதி ஏலம் போகிறது காந்தியின் கண்ணாடி.
பாதி உள்ளே பாதி வெளியே என ஏலம் போடுபவரின் வீட்டு தபால் பெட்டியில் தொங்கி கிடந்தது மகாத்மா காந்தியின் கண்ணாடி. இக்கண்ணாடி ஏலம் போனால் 15,000 யூரோ அதாவது ரூ. 13 லட்சத்து 25,728 தேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக்கேட்ட பிரிஸ்டல் நகரத்தை சார்ந்த ஏலம் போடும் நிறுவன உரிமையாளரான ஸ்டவ்வுக்கு நெஞ்சு படபடத்தது போலாயிற்று.
வெள்ளிக்கிழமை வந்த தபால் திங்கள் வரை பெட்டியில் வெள்ளைத் தபால் உறைக்குள் தூங்கிக் கொண்டிருந்தது. “அதில் காந்தியின் கண்ணாடி என எழுதியிருந்ததாக இங்கு வேலை பார்ப்பவர் என்னிடம் கொடுத்தார், ஆனால் இவ்வளவு விலை போகும் என நான் எதிர்பார்க்கவில்லை,” என்றார் ஸ்டவ்.

காந்தியின் கண்ணாடி எப்படி அங்கே வந்தது?
1920ல் ஆப்பரிக்காவில் சென்றபோது சொந்தக்காரருக்கு கிடைத்ததாகவும் இது தலைமுறை தலைமுறையாக கொடுக்கப்பட்ட சொத்து என்றும் இதன் உரிமையாளர் கூறியதாக ஸ்டவ் கூறினார். “காந்தி 1920 ல் கண்ணாடி போட ஆரம்பித்திருந்தார், குறைந்த கண்ணாடி சக்தி கொண்ட இது, காந்தியின் முதல் கண்ணாடியாக இருந்திருக்க வேண்டும்,” என ஸ்டவ் கூறினார்.
“தங்கம் பூசப்பட்ட இக்கண்ணாடி, தபால் பெட்டியிலிருந்து சுலபமாக கீழே விழுந்து குப்பையில் சேர்ந்திருக்கலாம். இப்போது உடையாமல் அருமாயான நிலையில் என்னிடம் உள்ளது, இது எங்கள் நிறுவனத்திரக்கே முதல் பெரிய ஏலம்,” என்று கூறினார் ஸ்டவ். ஆகஸ்ட் 21ம் தேதி விலைபோகும் இக்கண்ணாடிக்கு இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு குவிந்துள்ளது. காந்தி பலருக்கு தன் உடமைகளை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.