ஓவியா செய்த வேலையால் கலக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ்

நடிகை ஓவியாவிற்கு இருந்த ரசிகர்களை காணாமல்போகச்செய்யும் அளவுக்கு சமீபத்தில் தியேட்டர்களில் வெளியான 90எம்எல் படத்தின் விமர்சனங்கள் உள்ளது.
ஊருக்கு ஒதுக்குப்புறம் எதாவது ஒரு பழைய தியேட்டரில் ஓடும் பி கிரேடு படங்கள் போல இதில் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் வசனங்கள் மற்றும் காட்சிகள் உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால் நடிகை ஓவியாவின் பெயருக்கு பெரிய அடி விழுந்து ஐசியூவில் தான் இருக்கிறது. இதனால் தன் காஞ்சனா 3 படத்தின் வெற்றிக்கு பாதிப்பு வருமோ என கலக்கத்தில் இருக்கிறாராம் நடிகர் ராகவா லாரன்ஸ்.
இந்த படத்தில் ஓவியா மற்றும் வேதிகா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
likeheartlaughterwowsadangry
0