ரஜினி மக்கள் மன்றம்- புயல் வேகத்தில் வீடுகள் கட்டும் பணிகள் ஆரம்பம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் கட்சியான ரஜினி மக்கள் மன்றம், கஜா புயலால் பாதிக்கப்பட்ட சில மீனவ குடும்பங்களுக்கு ஓட்டு வீடு கட்டும் பணி இன்று தொடங்கியது.
ரஜினி மக்கள் மன்றம் புயலின் போது பாதிக்கப்பட்ட பகுதியில் ஒன்றரை மாத காலமாக நிவாரண உதவி செய்துவந்தது.
கஜா புயலால் குடிசை வீடுகள் இழந்த நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் வீடுகள் கட்ட முயன்ற உதவிகள் செய்ய கேட்டுக்கொண்டனர்.
இதன் அடிப்படையில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உள்ள மீனவ கிராமத்தில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு, கட்சி சார்பாக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் பதினைந்து ஓட்டு வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்யபட்டது. இந்த நிலையில் இன்று வீடு கட்டும் வேலைகள் துவங்கின.
தலைவரின் வேண்டுகோளுக்கு இண ங்க இன்னும் இரண்டு மாத காலத்திலேயே 15 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. போன மாதம் (நவம்பர்) சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரண பொருட்களை இக்கட்சி சென்னையிலிருந்து கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.