நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் காலமானார்!

சென்னை: நடிகரும், முன்னாள் எம்.பி.-யுமான ஜே.ஜே.ரித்தீஷ் உடல் நலக் குறைவு காரணமாக ராமநாதபுரத்தில் காலாமானார். அவருக்கு அயது 46.
சின்னப்புள்ள படத்தில் அறிமுகமான நடிகர் ஜே.கே.ரித்தீஷ், சமீபத்த்தில் வெளியான எல்.கே.ஜி திரைப்படத்தில் நடித்துள்ளார். தொடக்கத்தில் அதிமுக-வில் இருந்த இவர், பின்னர் அங்கிருந்து திமுக-வுக்கு மாறினார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி.-யான ரித்தீஷ், கடந்த 2016-ஆம் ஆண்டில் மீண்டும் அதிமுக-வில் இணைந்தார்.
இந்நலையில், ராமநாதபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் உணவு அருந்தி விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். நெடுநேரமாகியும் அவர் வெளியே வராததால், சந்தேகமடைந்த உதவியாளர்கள் அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு சரிந்த நிலையில் ஜே.கே.ரித்தீஷ் கிடந்துள்ளார்.
இதையடுத்து, மருத்துவர்களை அழைத்து வந்து பரிசோதித்துள்ளனர். அனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.