இணையத்தில் கசிந்த பிகில் படத்தின் பாடல்.! எப்படி இருக்குனு கேளுங்க.!

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ‘பிகில்’ படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாராவும் விஜய்யும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா மகன் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடிகர் விஜய் மைக்கேல் என்ற மகன் விஜயும், ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும், இந்த படத்தில் விஜய் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார் என்று அறிவிப்பு வெளியானது. மேலும், இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் பாடிய ‘சிங்க பெண்ணே’ பாடல் இணையத்தில் லீக் ஆகி படு வைரலாக பரவி வருகிறது.
இப்பாடலை பிரபல திரைப்பட விமர்சகரான பிரசாந்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பாடல் எதாவது கால் பந்தாட்ட போட்டியின் போது படத்தில் இடம் பெரும் என்று எண்ணம் தோன்றுகிறது. படத்தின் அப்டேட்டுகளை ‘பொத்தி பொத்தி’ பார்த்து வந்தது ஏ ஜி எஸ் நிறுவனம். ஆனால், தற்போது ஒரு பாடலே இணையத்தில் லீக் ஆனதால் ‘பிகில்’ படக்குழுவினர் மிகுந்த பிகிலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த பாடல் எப்படி உள்ளது என்று உங்களது கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.
‘சிங்க பெண்ணே’ பாடல்:
- Now We are available in Truth Social App 🙂
- Pro Premkumar’s Feel Good Movies 2022 List
- இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் மீது குற்றம் ?
- BIGGBOSS6 TAMIL Vote
- Famous Trending Lyrics writter Now on Twitter