கௌதம் மேனன் – சித் ஸ்ரீராம் – கார்த்திக் இணையும் டக்கர் கூட்டணி !

தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் எனப் பல அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் கோலோச்சி வரும் கவுதம் மேனன் அடுத்ததாக பாடகர் அவதாரத்தையும் எடுத்துள்ளார்.

சித்தார்த், யோகிபாபு நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ’டக்கர்’ என்ற திரைப்படத்திற்காக கவுத மேனன் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை பிரபல பாடகர் சித் ஸ்ரீராமும் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை வளர்ந்து வரும் முன்னணி பாடலாசிரியர் திரு. கு கார்த்திக் எழுதியுள்ளார். இந்த பாடல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரவுள்ளது

சித்தார்த், யோகிபாபு, திவ்யன்ஷா, அபிமன்யூ சிங், விக்னேஷ் காந்த், ராம்தாஸ் உள்பட பலர் நடித்துள்ள ‘டக்கர்’ திரைப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். கார்த்திக் கிரிஷ் இயக்கத்தில் வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவில் கெளதம் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *