கொடூர கேங்ஸ்டராக ரசித்து ரசித்து நடித்தேன் – விஜய் சேதுபதி

ஜூனில் வெளியாகி ஹிட் கொடுக்கவேண்டிய விஜய் நடிக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படம் கொரோனா காரணமாக தள்ளி போனது.
இப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி மோதிகொள்ளும் காட்சிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

மாஸ்டரில் ‘பவானி’ என்ற கதாபாத்திரத்தில் அச்சுறுத்தும் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதியிடம் அவருடைய கதாபாத்திரம் பற்றி கேட்டபோது, “ஒவ்வொருவர் மனதிலும் ஒரு அழுக்கு நிச்சயம் இருக்கும். அதையெல்லாம் வெளியேற்ற ஏதாவது வழி இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒருவர் வில்லனாக நடித்தால் அதை நிச்சயம் வெளிப்படுத்த முடியும். நான் அந்தப் படத்தில் கொடூர கேங்ஸ்டர் ஆக நடித்து இருக்கிறேன். ஆனால் அதை நான் மிகவும் ரசித்து நடித்தேன்” என்று அவர் கூறினார்.
மேலும் மாஸ்டர் பட ம் நிச்சயமாக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்றும், “மாஸ்டர் ஒரு மாஸ்டர்பீஸ்” என்றும் அவர் கூறியுள்ளார்.
Follow us :