ரிலீஸ் எப்போது? ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ குறித்து அறிவிப்பு வந்தாச்சு!

தனுஷ் நடிப்பில் உருவாகி, நீண்ட காலமாக வெளியாகாமல் உள்ள திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதற்கு தர்புகா சிவா இசையமைத்திருந்தார். இப்படத்தின் songs வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால் பல்வேறு காரணங்களால் 2 ஆண்டுகளாக படம் வெளியாகாமல் தள்ளிப் போனது.
ஆனால் இதற்கடுத்து மேகா ஆகாஷ் நடித்த படங்கள் வெளியாகி வெற்றியடைந்தன. இதனால் அவர் வளர்ந்து வரும் நடிகையாக மாறிவிட்டார். இந்தப் படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த சூழலில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து வரும் ஏப்ரல் மாதம் திரைப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் தற்போது மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’, துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வருகிறார். இதனால் தொடர்ச்சியாக தனுஷ் படங்கள் என்ற மகிழ்ச்சியில், அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.