மீண்டும் இயக்குனர் களம் காணும் தனுஷ் !

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட தனுஷ், ப.பாண்டி படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகி வெற்றி பெற்றார். இதையடுத்து தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, சரத்குமார், அதிதி ராவ், அனு இமானுவேல், ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரை வைத்து சரித்திர படம் ஒன்றை இயக்க தொடங்கினார். சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் பைனான்ஸ் பிரச்னையால் படம் கிட்டதட்ட டிராப் ஆனது.
இந்நிலையில் தனுஷ் இப்படத்தை மீண்டும் எடுக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் இப்பட வேலைகளில் தீவிரம் காட்ட உள்ளார். படத்திற்கு ‘நான் ருத்ரன்’ என பெயரிட்டுள்ளனர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.