பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் கேட்ட சம்பளம்… எத்தனை கோடி தெரியுமா?

இந்தியில் 13 சீசன்கள் வரை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது தான், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 2 அல்லது 3 சீசன்களையே கடந்துள்ளது. தமிழில் பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஓவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் ரீல் லைப் பிரபலங்கள் ரியல் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை தெறித்து கொள்ளவே பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்கள்.

முதல் சீசனில் ஜூலி, காயத்ரி, ஓவியா, இரண்டாவது சீசனில் மகத், மூன்றாவது சீசனில் மீரா மிதுன் ஆகியோர் தான் சர்ச்சைகளுக்கும், டி.ஆர்.பி.க்கும் முக்கியமான நபர்களாக திகழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வந்தால் புகழும், பட வாய்ப்புகளும் கிடைக்கும் என்பதால் ஏராளமானோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே நடிகை சுனைனா, அமிர்தா, அதுல்யா, இடையழகி ரம்யா பாண்டியன் ஆகியோர் பெயர் அடிபட்ட நிலையில், விஜய் டிவி மூலம் பிரபலமான சிலரும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஜே மணிமேகலை, மற்றும் ஷிவாங்கி ஆகியோர் பெயரும் அடிபட்டு வருகிறது. அதே நேரத்தில் சமீப காலமாக, ஹாட் போட்டோஸ் மூலம் சோசியல் மீடியாவை சூடேற்றி வரும் நடிகை கிரண், பூனம் பாஜ்வா ஆகியோரிடமும் பேசி வருகிறார்களாம் விஜய் டிவி நிர்வாகம்.

இதனிடையே பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக வேறொரு பிரபலம் தொகுத்து வழங்குவார் என தகவல்கள் அடிப்பட்டது. இதனை மறுத்துள்ள விஜய் டி.வி. நிர்வாகம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமல் ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று கூறியிருந்தது. அதேபோல் தற்போது சீரியல் படப்பிடிப்புகளை தொடங்கியுள்ள விஜய் டிவி, விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சிகான பணிகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் இம்மாத இறுதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் கமல் ஹாசன் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக 25 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களிலும் கமல் ஹாசனின் நெறியாள்கை தனி இடம் பிடித்தது. போட்டியாளர்களிடையே பிரச்சனையை தீர்ப்பதிலும் சரி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் முகத்திற்கு நேராக கேள்வி கேட்பதிலும் சரி கமலைத் தவிர வேறு யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தாலும் இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. மற்ற 3 சீசன்களுக்கும் கமல் ஹாசனுக்கு ரூ.15 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை 10 கோடி ரூபாயை உயர்த்தி கேட்டுள்ளார். அதனால் விஜய் டி.வி. நிர்வாகம் கமல் ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares