“தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்”.. பிக் பாஸ்’ போட்டியாளரின் குடும்பம் !

சென்னை: தன் மகள் மீது பரப்பப்படும் அவதூறு கருத்துக்களால், தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக பிக் பாஸ் போட்டியாளரான மீரா மிதுனின் தாய் போலீசில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி இருப்பவர் நடிகை மீரா மிதுன். தானா சேர்ந்த கூட்டம் உட்பட சில படங்களில் நடித்துள்ள இவர் மீது, அழகிப்போட்டி நடத்தி பெண்களை ஏமாற்றியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விரைவில் கைது செய்யப்படுவார் என்ற சூழலில்தான் பிக் பாஸ் போட்டியாளர் ஆனார் மீரா. பிக் பாஸ் வீட்டிற்குள் வைத்து அவர் கைது செய்யப்படுவார் என அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ள ஜோ மைக்கேல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்திருந்தார். இதனால் பிக் பாஸ் வீட்டில் இனி வரும் நாட்களில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறலாம் எனத் தெரிகிறது

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares