அத்தி வரதர் பற்றி அறிய வேண்டிய உண்மைகள்

பலர் தாங்கள் 6 மணி நேரத்துக்கு மேல் சிரமங்களைச் சந்திப்பதாகக் கூறுகின்றனர். சிலர் 2 மணி நேரத்தில் தரிசித்து வந்தோம் என்கிறார்கள். அப்படி என்றால் ரியாலிட்டி என்ன?
காஞ்சிபுரம் அத்திவரதர் வைபத்தில் திளைத்திருக்கிறது. சிறிய மாட வீதிகள். அதில் பெருகி வரும் மக்கள் வெள்ளம். பலர் தாங்கள் 6 மணி நேரத்துக்கு மேல் சிரமங்களைச் சந்திப்பதாகக் கூறுகின்றனர். சிலர் 2 மணி நேரத்தில் தரிசித்து வந்தோம் என்கிறார்கள். அப்படி என்றால் ரியாலிட்டி என்ன?
அதிகமாக வரும் பக்தர்களுக்கு ஏற்றவாறு காஞ்சி நகருக்குள் பேருந்து வசதி இல்லை
அரசு மினி பேருந்துகளை தவிர்த்து தனியார் மினி பேருந்துகள் நகருக்குள் இயக்க அனுமதி மறுப்பு. ஆனால் அவர்கள் பெருமாள்கோயில் என்று சொல்லி இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஊருக்கு வெளியே இறக்கி விடுகிறார்கள்
ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ கட்டணக் கொள்ளை. ஷேர் ஆட்டோ ஒருவருக்கு ரூ.50 வரை வாங்குகிறார்கள்.
பள்ளி செல்லும் மாணவர்கள் வாகனப் போக்குவரத்து சரியாக இல்லாமல் அவதிப் படுகிறார்கள்.
உள்ளுர் வாகனங்கள் அனுமதி பாஸ் வைத்திருந்தாலும் மாடவீதியில் நுழைய அனுமதி இல்லை. ஆனால் VIP டோனர் பாஸ் வைத்திருந்தால் அவர்கள் வாகனங்கள் மாடவீதியில் அனுமதிக்கப் படுகிறது.
மாடவீதியில் இருப்போர்களுக்கு எமர்ஜென்ஸிக்காக மருத்துவமனை செல்ல வேண்டும் என்றால் அரை கிமீ நடந்து சென்றால் தான் வண்டி கிடைக்கும். அதுவும் கட்டண கொள்ளையுடன்…!
ஒரே ஒரு நல்லது. எல்லாத்துக்கும் வண்டியை நாடுபவர்கள் இப்போது நடக்கிறார்கள். உடம்புக்கு நல்லது அவ்வளவுதான்!
பல வசதிகளை இழந்திருந்தாலும் எவ்வளவு நேரம் ஆனாலும் அத்தி வரதரை சேவிக்கும் பக்தர்கள் எள்ளளவும் குறையவில்லை.
ஏன் என்றால் இது ஆழ்வார் மண்.