வலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கும் படம் வலிமை. அஜித் குமார், ஹுமா குரேஷி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் லாக்டவுன் அமலானதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், கடந்த சில வாரங்களுக்கு முன் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது.
இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் சண்டை காட்சிகளில் கலந்துகொண்டபோது நடிகர் அஜித்துக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொண்டு அஜித்குமார் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அதனை முடித்து விட்டு தற்போது சென்னை திரும்பி இருக்கிறார். வலிமை படத்தின் அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுகளைக் கடந்து விட்டபோது, படம் குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. அதனால், அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக போனி கபூரிடம் படத்தின் அப்டேட் குறித்து கேட்டு ட்விட்டரை கலங்கடித்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் மதுரையில் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு போஸ்டர் அடிக்கும் அளவுக்குச் சென்றது.
இந்தநிலையில், வலிமை படத்தில் அஜித் குமார் பைக் ஓட்டும் காட்சியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்தப் புகைப்படங்களை இணையத்தில் அஜித் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்

இந்நிலையில் தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் பாடல் எழுதிய பாடலாசிரியர் அருண் பாரதி “வலிமையோட பறக்குது
சம்பவம் ஒன்னு இருக்குது” என்று டிவிட் செய்தார் உடனடியாக அந்த டிவிட் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது

இவருக்கு தல அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது மேலும் இவர் அண்ணாதுரை, காளி , சண்டை கோழி 2, கொலைகாரன், திமிருபுடிச்சவன், தில்லுக்கு துட்டு 2, உள்ளிட்ட படங்களில் சிறப்பான பாடல்களை தந்தவர் என்பது குறப்பிடத்தக்கதாகும்