ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தளபதி விஜய்…பிகில் அப்டேட்

தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் Firstlook போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று இன்று மாலை வெளியாகும் என்று அர்ச்சனா கல்பாத்தி அறிவித்திருந்தார்.தற்போது இந்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தளபதி விஜய் ஒரு பாடல் பாடியுள்ளார்.கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள விஜய்முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுகிறார்.கடைசியாக இவர் பைரவா படத்தில் இடம்பெற்றிருந்த பாப்பா பாப்பா என்ற பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் தீபாவளிக்கு படத்தை எதிர்நோக்கி இந்த அப்டேடுடன் தங்களது கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.