தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போயுள்ளதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த படம் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ல் ரிலீசாகும் என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது ஒரு சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் படம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளது.