ஈகோ உள்ளவர்கள் அஜித்தின் காலில் விழ வேண்டும்: நடிகை !

எனது வாழ்நாளில் அஜித்தை போன்று ஒரு நபரை பார்த்ததில்லை என்றும், ஈகோ உள்ளவர்கள் அஜித்தின் காலில் விழ வேண்டும் என நடிகை மீனா வாசு தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் இயக்குநர் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்தை பொங்கலுக்கு திரைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ள படக்குழுவினர் அதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
விசுவாசம் படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்தை சந்தித்த நடிகை மீனா வாசு அவருடன் புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ”எனது வாழ்நாளில் அஜித்தை போன்று ஒரு நபரை பார்த்ததில்லை. ஒரு படத்தில் வெற்றி பெற்ற பின் தங்களின் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளும் பல கலைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். வெற்றியை ஈகோ பின் தொடர்ந்தால் அந்த வெற்றி நீண்ட நாள் நீடிக்காது. மிகப்பெரிய அளவில் ஹிட் படங்களை கொடுத்து வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ள அஜித்தின் கால்களை கழுவி, அவர்கள் தொட்டு வணங்க வேண்டும். அதன் பின்னாவது அஜித்திடம் இருக்கும் 10% குணத்தாலும், பண்பாலும் அவர்கள் ஆசிர்வதிக்கப்படுவார்கள் என நம்புகிறேன்… ஆசைப்படுகிறேன்”