22 கிலோ உடல் எடையை குறைத்த நடிகர் பிரசாந்த்…மோகன் ராஜா படத்துக்காக வெறித்தனம்!

தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். விஜய், சூர்யாவை விட அதிகமான ஹிட் படங்களை கொடுத்து வந்தார். கடந்த 2005 ஆம் ஆண்டு கிரஹலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமண வாழ்க்கை திரை வாழ்க்கையை போல வெற்றிகரமாக இல்லாததால் 2009 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இதனிடையில் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறினார் பிரசாந்த். இதையடுத்து மம்பட்டியான் படத்தில் 2011 ஆம் ஆண்டு நடிகை மீரா ஜாஸ்மினுடன் நடித்தார். அதுவும் எதிர்பார்த்தளவு கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் நடிகர் பிரசாந்த் மீண்டும் தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். பாலிவுட்டில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இப்படம் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தேசிய விருதுகளை பெற்ற இப்படத்தின் தமிழ் ரீமேக்கை வாங்க கடுமையான போட்டி நிலவியது. இதை தொடர்ந்து நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.

இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us :

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares